வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x

திருவள்ளூர் ஏரிக்கரையில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்,  

திருவள்ளூர் ஏரிக்கரையில் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 27) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு வடிவேலுவை தகாத வார்த்தையால் பேசினார். 

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கை மற்றும் முதுகில் குத்திவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து வடிவேல் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக தப்பி ஓடிய சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Next Story