கும்மிடிப்பூண்டி அருகே ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 4 May 2022 12:03 PM IST (Updated: 4 May 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் சத்யா. காய்கறி வியாபாரி. இவரது மகன் திவாகர் (வயது 15). ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ளே ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் குளிப்பதற்கு சக நண்பர்கள் சிலரோடு மாணவன் திவாகர் சென்றான்.

அங்கு குளித்து கொண்டிருக்கும்போது ஆற்றில் மூழ்கி திவாகர் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story