பள்ளிப்பட்டு, திருவள்ளூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
பள்ளிப்பட்டு, திருவள்ளூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கடந்த 30 நாட்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடித்தனர். நேற்று முன்தினம் இரவு வானில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தற்போது தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் இருப்பதால் வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் ரம்ஜான் சிறப்பு தொழுகை பள்ளிப்பட்டு பேரித்தெருவில் இருக்கும் ஜும்மா மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு, வெளியகரம், கத்திரி பள்ளி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மதியம் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தனர். முன்னதாக காலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு புறப்படும் முன்பாக அவர்கள் ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, அரிசி, கோதுமை போன்றவற்றை வழங்கினார்கள். பலர் ஏழைகளுக்கு பணத்தையும் பரிசாக அளித்தனர். ரம்ஜான் சிறப்பு தொழுகை பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, கொளத்தூர், ஆர்.கே. பேட்டை, அம்மையார்குப்பம் போன்ற பகுதிகளிலும் நடைபெற்றது.
திருவள்ளூர் டோல்கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மசூதிகளில் திரளான முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல திருப்பாச்சூர், மணவாளநகர், ஒண்டிகுப்பம், கடம்பத்தூர், பேரம்பாக்கம், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story