சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஓட்டலில் ஏ.சி. வெடித்து ஊழியர் படுகாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஓட்டலில் ஏ.சி. வெடித்து ஊழியர் படுகாயம் அடைந்தார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மகேந்திரா சிட்டி பக்தசிங் நகரில், மகேஸ்வரி என்பவர் வீட்டிலேயே சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் வட மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 26), என்பவர் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ஓட்டல் அமைந்துள்ள மொட்டை மாடியில் ராம்குமார் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏ.சி. வெளிபகுதி பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமார், உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்து உள்ளார். அப்போது திடீரென ஏ.சி. வெடித்து சிதறியது.
இதில் ராம்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story