24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது


24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது
x
தினத்தந்தி 4 May 2022 5:12 PM IST (Updated: 4 May 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

கலவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுவதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் இப்போது 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் உள்ளனர். இதனால் கர்ப்பிணிகள் எந்த நேரத்திலும் சிகிச்சை பெறலாம் என இணை இயக்குனர் லட்சுமணன் கூறினார். மேலும் தற்போது இங்கு அதிக அளவு பிரசவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ அலுவலர் வெண்ணிலா, டாக்டர்கள் ரஞ்சனி, சதீஷ்குமார், செவிலியர் தேவி ஆகியோர் தலைமையில் நரிக்குற பெண் ஒருவருக்கு சுகப்பிரசவம் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் ஊட்டச்சத்து பழங்களை வழங்கினர்.

மேலும் மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் நடைபெறுகிறது. காலை, மாலை வேளைகளில்  நோயாளிகள் அதிகளவு வருகின்றனர். அவர்கள் வாலாஜா, வேலூர் போன்ற மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதில்லை. இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ மனையை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகின்றோம் என்றார்.

Next Story