இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு


இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 4 May 2022 6:06 PM IST (Updated: 4 May 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச்செயலாளர் இளங்கோ தலைமையில் பொருளாளர் சர்ஜின்குமார், துணைச்செயலாளர் பிரேம்குமார், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் விஜயசாரதி (வேலூர்), கோட்டி என்கிற கோவிந்தன் (காட்பாடி) மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில்,  இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பொதுஅமைதியை கெடுக்கும் வகையில் பல சதிசெயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
யூடியூப் சேனலில் இந்து சாஸ்திரங்கள், புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. யூடியூப்பில் கருத்துகளை பதிவு செய்த நபருக்கும், அதன் நிர்வாகிக்கும் இந்து முன்னணி அமைப்பினர் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். 

எனவே ஜனநாயத்துக்கு எதிராக பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

Next Story