குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடி
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
நகைக்கடை
கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன்(வயது 47). இவருக்கும், சின்னசேலத்தை சேர்ந்த தியாகு என்பவருக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்தது.
அட்சய திருதியையொட்டி குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக முருகனிடம், தியாகு கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த ஒருவரின் செல்போன் எண் தருகிறேன் அவரிடம் பேசி குறைந்த விலையில் தங்கத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என முருகனிடம் கூறி, அவரது நம்பரை கொடுத்துள்ளார்.
2 கிலோ தங்கம்
இதனை நம்பிய முருகன், தன்னிடம் தியாகு கொடுத்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த பண்டரிநாதன்(65) என்பவர் பேசினார்.
அப்போது பண்டரிநாதன், உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டும்? என்று கேட்டுள்ளார். அதற்கு முருகன் தனக்கு 2 கிலோ தங்கம் வேண்டும் என கூறியுள்ளார்.
ரூ.96 லட்சம்
இதனையடுத்து 2 கிலோ தங்கம் வாங்குவதற்கான பணம் ரூ.96 லட்சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக வாருங்கள். இல்லையென்றால் வேறு நபருக்கு கொடுத்து விடுவேன் என முருகனிடம் பண்டரிநாதன் கூறியுள்ளார்.
இதனையடுத்து முருகன் ரூ.96 லட்சத்துடன் கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார். அப்போது பண்டரிநாதன், 850 கிராம் எடை கொண்ட தங்கத்தை முருகனிடம் கொடுத்து விட்டு மீதம் உள்ள நகைகளை பின்னர் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி விட்டார்.
சங்கிலி, மோதிரம் பறிப்பு
இதனால் வேறு வழியின்றி முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்துவிட்டு தனியாக சென்றுள்ளார்.
இதனை அறிந்த பண்டரிநாதன் தனது ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றதாக தெரிகிறது.
7 பேர் கைது
இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் முருகன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வேதாரண்யம் துைண போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பண்டரிநாதன்(65), திருச்சியை சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ்(29), சென்னையை சேர்ந்த பாலகுமார்(32), திருத்துறைப்பூண்டி எழிலூரை சேர்ந்த துர்க்காதேவி(42), கருப்பம்புலத்தை சேர்ந்த செல்லத்துரை(43), வடமழை மணக்காட்டை சேர்ந்த தனுஷ்கொடி(32), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மணிமாறன் (25) ஆகிய 7 பேைர கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 சொகுசு கார்கள்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் ேமாசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----
Related Tags :
Next Story