தடையை திரும்பப்பெறக்கோரி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்

தடையை திரும்பப்பெறக்கோரி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2022 6:51 PM IST (Updated: 4 May 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறக்கோரி மயிலாடுதுறையில், கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை:
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறக்கோரி மயிலாடுதுறையில், கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன நுழைவு வாயிலில், அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்து.முரளி முன்னிலை வகித்தார். 
தடையை திரும்பப்பெற வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
--

Next Story