எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்:
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பில் நாகை எல்.ஐ.சி. கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை கிளை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை நாகை மாவட்ட தொழிற்சங்க ஊழியர் கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களின் சேமிப்பை பங்கு விற்பனையாக்கும் முடிவை கைவிட வேண்டும். எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கும் போக்கை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பாலிசிதாரர்களின் போனஸ் குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் கபிலன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story