நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும்
நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேதாரண்யம்:
நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்புப் பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புயல் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தை எழுத்தாளர் பாலையன் தொடங்கி வைத்தார். இதில் அமைப்பின் பொதுச்செயலாளர் காமராசு கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் நடந்த பல்வேறு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும்
கூட்டத்தில், சாத்தூரில் வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது. நாகை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்களை ஒருங்கிணைத்து தனி கலைக்குழு ஏற்படுத்துவது. நலிந்துவரும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைய ஏதுவாக நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும்.
தனி பாடத்திட்டமாக
துளசியாப்பட்டினம் அவ்வையார் கோவிலில் அரசு எடுக்கும் அவ்வை விழாவை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்துவது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் நாட்டுப்புறவியலை தனி பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
=
Related Tags :
Next Story