நாகூரில் பதநீர் விற்பனை மும்முரம்


நாகூரில்  பதநீர் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 4 May 2022 7:34 PM IST (Updated: 4 May 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி நாகூரில் பதநீர் விற்பனை மும்முரமாக நடந்தது.

நாகூர்:
அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி நாகூரில் பதநீர் விற்பனை மும்முரமாக நடந்தது. 
அக்னி நட்சத்திரம்
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அக்னி நட்சத்்திரம் எனும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக  வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்கள் ஆங்காங்கே பதநீர், குளிர்பானம், இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, தர்பூசணி  உள்ளிட்டவைகளை வாங்கி பருகி வருகின்றனர். 
பதநீர் விற்பனை
நாகூரில் பதநீர் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், வெப்பத்தை தணிக்கவும் பொதுமக்கள்  ஆர்வமுடன் பதநீரை வாங்கி பருகி செல்கின்றனர்.  
இதுகுறித்து பதநீர் வியாபாரி ஒருவர் கூறுகையில், 
13 ஆண்டுகளா பதநீர் வியாபாரம் செய்து வருகிறேன். வெயில் காலத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் இந்த பதநீர் விற்பனையாகும். 1 லிட்டர் ரூ 60-க்கும், 1 கப் ரூ.20-க்கும் பதநீரை விற்பனை செய்து வருகிறோம். இதனால் ரூ.10,ரூ.20 வரை லாபம் கிடைக்கிறது என்றார். 
தர்பூசணி விற்பனை 
நாகை காம்பாடி பப்ளிக் ஆபீஸ் சாலையில் தர்பூசணி விற்பனை நடைபெற்று வருகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் சாலையில் செல்வோர் தர்பூசணி கடைகளுக்கு சென்று பழங்களை சாப்பிட்டும், வீட்டிற்கு வாங்கியும் செல்கின்றனர். இதனால் தர்பூசணி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம், மரக்கானம் ஆகிய பகுதிகளில் விசாயிகள் அதிகளவில் தர்பூசணி பழங்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு மழை போதுமான அளவு பெய்ததால், தர்பூசணி விளைச்சல் கனிசமாக அதிகரித்துள்ளது. தோட்டங்களுக்கு சென்று விவசாயிகளிடம் இருந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்து லாரியின் மூலம் நாகை பகுதிக்கு கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொள்முதல் செய்து வருகிறோம். தர்பூசணி பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம் என்றார். 




Next Story