பேரிடர் மீட்பு மக்கள் குழு கூட்டம்
பேரிடர் மீட்பு மக்கள் குழு கூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே நடுஹட்டி கிராமத்தில் பேரிடர் மீட்பு மக்கள் குழு அறிமுக கூட்டம் மற்றும் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வருவாய் ஆய்வாளர் தீபக் தலைமை தாங்கி பேசும்போது, பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கிராமங்களில் தன்னார்வலர்களை தேர்வு செய்து பேரிடர் மீட்பு மக்கள் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவினர் பேரிடர்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டால் உடனடியாக அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் அபாயகரமான மரங்கள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த குழுவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், உத்தவியர் மகேஷ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இதேபோன்று கோத்தகிரி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் அறிமுக கூட்டம் நடத்தி குழுவிற்கு தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story