தீக்காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
நாகையில் தீக்காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
நாகப்பட்டினம்:
நாகை முனிசிபல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது50). சம்பவத்தன்று இவர் வீட்டுவாசலில் கொசுவர்த்தி சுருளை கொளுத்தி வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேலுமணி வேட்டியில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுகுறித்து வேலுமணி மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story