அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.33½ லட்சம் மோசடி
அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.33½ லட்சம் மோசடி செய்த கோலாரை சேர்ந்தவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மங்களூரு:
அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக...
உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. இவர், மங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஷாலினி, உடுப்பி டவுன் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில் எனக்கு, கோலாரை சேர்ந்த நிதின் குமார் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து சில நாட்கள் கழித்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், என்னிடம் அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், அதனை வாங்கி தர ரூ.33.65 லட்சம் செலவாகும் என்று ெதரிவித்தார்.
ரூ.33½ லட்சம் மோசடி
இதை நம்பி நானும் விருப்பம் தெரிவித்து அவரின் வங்கிகணக்குக்கு பண பரிவர்த்தனை மூலம் ரூ.33.65 லட்சத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுபற்றி கேட்க அவரை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றேன்.
ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக வந்தது அப்போது தான் அவர், என்னிடம் அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதின்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story