முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி பெண் உள்பட 3 பேரிடம் ரூ.1½ கோடியை மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு


முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி பெண் உள்பட 3 பேரிடம் ரூ.1½ கோடியை மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 May 2022 9:45 PM IST (Updated: 4 May 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி பெண் உள்பட 3 பேரிடம் ரூ.1½ கோடியை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்

பெங்களூரு: முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி பெண் உள்பட 3 பேரிடம் ரூ.1½ கோடியை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

தனியார் நிறுவனத்தில் முதலீடு

துமகூரு மாவட்டம் சிரா அருகே ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜண்ணா சிதானந்தமூர்த்தி. இவரை அபிஷேக் சிங் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.7½ லட்சம் முதலீடு செய்தால் ரூ.56 லட்சம் வரை அதிக லாபம் கிடைக்கும் என்று ராஜண்ணாவிடம் கூறி இருக்கிறார். 

அதன்படி, அவரும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து ராஜண்ணாவை தொடர்பு கொண்ட அபிஷேக் சிங், நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு ரூ.73 கோடி கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை அவரும் உண்மை என்று நம்பி இருக்கிறார். அதன்பிறகு, ரூ.73 கோடியில் தனக்கு கமிஷன் தொகையாக ரூ.45 லட்சத்தை கொடுக்க வேணடும் என்று அபிஷேக் சிங் கூறியுள்ளார். இதுபற்றி தனது உறவினர்களான தேவராஜப்பா, ஷில்பாவிடம் ராஜண்ணா கூறி இருக்கிறார். உடனே அவர்கள் ரூ.45 லட்சத்தை ராஜண்ணாவிடம் கொடுத்து, அபிஷேக் சிங் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
 
மோசடி

அதன்பிறகு, ரூ.73 கோடிக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறி குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.1 கோடியே 5 லட்சத்தை அபிஷேக் சிங் வாங்கி இருக்கிறார். பின்னர் அவர் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார். 

இதன் காரணமாக அபிஷேக் சிங்கை ராஜண்ணா, தேவராஜப்பா, ஷில்பாவால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
அப்போது தான் தங்களிடம் ஒட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 57½ லட்சத்தை வாங்கி அபிஷேக் சிங் மோசடி செய்திருப்பதை 3 பேரும் உணர்ந்தனர். 
இதுபற்றி துமகூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story