பிரதமரை சந்தித்து முறையிட முடிவு


பிரதமரை சந்தித்து முறையிட முடிவு
x
தினத்தந்தி 4 May 2022 10:03 PM IST (Updated: 4 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

பிரதமரை சந்தித்து முறையிட முடிவு

திருப்பூர்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமரை சந்தித்து முறையிடுவது என்று அனைத்து பின்னலாடை தொழில்துறையினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைகூட்டம்
நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவதால் பின்னலாடை தொழில் நிலை குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அனைத்து பின்னலாடை தொழில் துறையினருடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சைமா, டீமா, நிட்மா, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், டிப், டிப்மா, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி சங்கம், டெக்மா, டெக்பா, காஜாபட்டன் உரிமையாளர்கள் சங்கம், சிம்கா, திருப்பூர் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்துறை சங்க நிர்வாகிகள் பங்கேற்று தொழில் நிலைமை குறித்தும், அடுத்தகட்ட முடிவு குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
பிரதமரை சந்தித்து முறையிட முடிவு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
திருப்பூர் தொகுதி சுப்பராயன் எம்.பி., மற்றும் இந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களிடம் திருப்பூர் பின்னலாடை தொழில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பு, தொழில் நிறுவனங்களின் தற்போதையை நிலை குறித்து பிரதமர் மோடி, ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து முறையிடுவது, நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், பஞ்சை பதுக்கி வைத்திருப்பவர்களே ஏற்றுமதி செய்து வருவதால் பஞ்சு ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். அதுபோல் உள்நாட்டு தேவைக்கு அதிக தேவை இருப்பதால் நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். பருத்தி பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்களிடம் முறையிடுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Next Story