மதுரைவீரன் கோவில் ஆண்டு விழா


மதுரைவீரன் கோவில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 4 May 2022 10:10 PM IST (Updated: 4 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

மதுரைவீரன் கோவில் ஆண்டு விழா

உடுமலை
உடுமலை தில்லைநகர் நெடுஞ்செழியன் காலனியில் உள்ளது மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன்,பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில். இந்த கோவில் திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம்  திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து போடிப்பட்டி வந்து, அங்கிருந்து மதுரை வீரன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று  காலை மாவிளக்கு, முளைப்பாரி மற்றும் சீர்வரிசைப்பொருட்களை ருத்ரப்பநகர் விநாயகர் கோவிலில் இருந்து மதுரைவீரன் கோவிலுக்கு எடுத்துவருதல் நிகழ்ச்சி நடந்தது. 
 இதைத்தொடர்ந்து மதுரைவீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள்  திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மாலையில் சுவாமி ஊர்வலம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் அபிஷேக பூஜை, மஞ்சள் நீராட்டு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Next Story