திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
தமிழக அரசால் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அ.சாத்தனூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நடத்தப்பட உள்ளது. இதில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல், தேனீ வளர்ப்பு ஆகிய இனங்களில் மொத்தம் 40 நபர்களுக்கு 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தோட்டக்கலைத்துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு, ஏமப்பேர், தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கு பெறும் பயிற்சியாளர்களுக்கு பயணப்படி அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். குறைந்தபட்சம் 85 சதவீதம் வருகை பதிவு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story