பிளஸ்-2 தேர்வை 14 ஆயிரத்து 956 பேர் எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வை 14 ஆயிரத்து 956 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 10:20 PM IST (Updated: 4 May 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வினை 61 மையங்களில் 14 ஆயிரத்து 956 பேர் எழுதுகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  தொடங்கும் பிளஸ்-2 தேர்வினை 61 மையங்களில் 14 ஆயிரத்து 956 பேர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலையில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப் பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப் பட்டது. இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (5-ந் தேதி) தொடங்கி வரும் 28-ந் தேதி வரை நடை பெறு கிறது. 
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வினை 14 ஆயிரத்து 956 பேர் எழுது கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 158 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 118 மாணவர் களும், 7 ஆயிரத்து 838 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 
இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 8 மாணவர்களும், 22 மாணவிகளும் என 30 பேர் அடங்குவர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 61 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட அளவில் மண்டபத்தில் அதிகபட்சமாக மொத்தம் 5 ஆயிரத்து 462 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நடவடிக்கை
தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் பகுதிகளை சேர்ந்த 6 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மின்வாரிய ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சமீப காலங்களில் பள்ளி வளாகங்கள், வெளிப்பகுதிகளில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதுபோன்ற பள்ளிகளின் அருகில் கூடுதல் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story