தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பல்
சங்கராபுரம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை மனைவி சித்ரா. இவரது கூரைவீடு நேற்று காலை திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் தாசில்தார் (பொறுப்பு) இந்திரா, மண்டல துணை தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் திருமலை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட சித்ரா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story