அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இடம்பெற வேண்டும்


அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இடம்பெற வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2022 10:55 PM IST (Updated: 4 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடக்கும் அரசின் சாதனை விளக்க கண்காட்சியில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டா் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. எனவே ஓராண்டில் அரசின் அரும்பணிகள், சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நலத்திட்ட உதவிகள்

எனவே இந்த கண்காட்சியில் அனைத்து துறையினரும், தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து இடம்பெற செய்ய வேண்டும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை துறை அதிகாரிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல், மாணவ, மாணவிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், பல்வேறு கருத்தரங்குகளையும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இணை இயக்குநர் வேளாண்மை வேல்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story