மதுக்கடையில் தீவைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பா.ம.க. பெண் நிர்வாகியால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் மதுக்கடைக்கு தீவைத்துவிட்டு தானும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பா.ம.க பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மதுக்கடைக்கு தீவைத்துவிட்டு தானும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பா.ம.க பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆயுதப்படை குடியிருப்பையொட்டி தேசிய நெடுஞ்சாலையோர பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இந்த மதுக்கடை உள்ளதாக கோரி தொடர் புகார்கள் எழுந்தன.
ராமநாதபுரம் ஆதம்நகரை சேர்ந்த ஜமீன்கான் என்பவருடைய மனைவியும், பா.ம.க. மாவட்ட பொருளாளருமான ஆயிஷாவும் (வயது40), இந்த மதுக்கடையை அகற்றக்கோரி மனு கொடுத்து வந்தாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த கடையில் மதுக்குடித்த சிலர், அந்த வழியாக வந்த கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தீ வைப்பு
இதுபற்றி அறிந்து, தற்போது மதுரை கூடல்நகரில் வசித்துவந்த ஆயிஷா நேற்று பிற்பகலில் ராமநாதபுரம் வந்து, திடீரென அந்த மதுக்கடை வாசல் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடையின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்ததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடையில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை உடனடியாக அணைத்துவிட்டனர். இதனால் அந்த இடம் கருகிப்போய் இருந்தது.
அப்போது மதுக்கடையை உடனடியாக அகற்றக்கோரி ஆயிஷா, தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று ஆயிஷாவை மீட்டனர். போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற ஆயிஷா உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஆயிஷா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story