கழுத்தை அறுத்து பெண் படுகொலை


கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 4 May 2022 11:24 PM IST (Updated: 4 May 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே சீட்டு பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

போடி: 


ஏலச்சீட்டு 
போடி அருகே உள்ள வினோபாஜி காலனி பனோரமா நகரை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பவுன்தாய் (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமராஜ் இறந்து விட்டார். இதனால் பவுன்தாய் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.  
அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரபு (30). இவர் இலவம் பஞ்சு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். பிரபு, பவுன்தாயிடம் ரூ.1 லட்சம் சீட்டு போட்டிருந்தார். அந்த சீட்டு பணத்தை பவுன்தாய் பிரபுவிடம் கொடுத்தார். அந்த பணத்துக்கு தவணை தொகை அவர் முறையாக செலுத்தவில்லை. இதனால் பிரபுவிடம் சீட்டு பணத்தை ஒழுங்காக செலுத்தும்படி பவுன்தாய் பலமுறை கேட்டார். ஆனால் அவர் பணத்தை தரவில்லை என தெரிகிறது. 

கழுத்தை அறுத்து படுகொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபுவின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பவுன்தாய் சீட்டு பணம் கேட்டார். அப்போது பிரபு அங்கு இல்லை. பின்னர் பவுன்தாய் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் பிரபு வீட்டுக்கு வந்தார். அவரிடம் சீட்டு பணம் கேட்டு பவுன்தாய் வந்து தகராறு செய்ததாக பெற்றோர் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, பவுன்தாயின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவுன்தாயை குத்த முயன்றார். உடனே அவர் தடுத்தார். இதில் பிரபுவின் கையில் காயம் ஏற்பட்டது. அதில் கோபமடைந்த பிரபு, பவுன்தாய் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பவுன்தாயின் கழுத்தை ஆட்டை அறுப்பது போன்று அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

கைது 
இதுகுறித்து போடி தாலுகா போலீசில் பவுன்தாய் அக்காள் மகன் ஆனந்தகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். 
மேலும் அவரிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சீட்டு பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story