கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்
திருவாரூர் கலெக்டா் பெருந்திட்ட வளாகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திருவாரூர்;
திருவாரூர் கலெக்டா் பெருந்திட்ட வளாகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மாவட்ட ஊராட்சி கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலாளர் லதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வன், பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சடையப்பன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கருணாநிதி பெயர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைத்து தருவது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடத்துக்கு அலுவலக தளவாட பொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்வது, திருவாரூர் மாவட்டத்தினை முன்னோடி கணினி மாவட்டமாக உருவாக்கி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து துறைகளுக்கான அலுவலகங்களை ஏற்படுத்தி மிக சிறப்பாக செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்துக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story