வருவாய் ஆய்வாளரை தாக்கிய வார்டு உறுப்பினர் மீது வழக்கு
வேப்பந்தட்டையில் வருவாய் ஆய்வாளரை தாக்கிய வார்டு உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் வெங்கலம் பிர்க்கா வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அமிர்தலிங்கம். இவர் தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது வேப்பந்தட்டையை சேர்ந்த 4-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் கணேசன் (வயது 60) என்பவர் அமிர்தலிங்கத்திடம் வந்து தனது மகன் இறப்பு சான்றிதழ் தொடர்பாக நான் கேட்டபோது கொடுக்கவில்லை. எனது மருமகள் கேட்டவுடனே கொடுத்து விட்டீர்கள் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் அதிகமாகி அமிர்தலிங்கத்தை கணேசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அமிர்தலிங்கம் எசனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று அலுவலகம் திரும்பினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story