எலச்சிபாளையம் அருகே அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்


எலச்சிபாளையம் அருகே அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 May 2022 11:30 PM IST (Updated: 4 May 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம் அருகே அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது.

எலச்சிபாளையம்:
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 38). லாரி டிரைவர். இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் அரிசி அரவை மில்லில் இருந்து அரிசிகளை லாரியில் ஏற்றி கொண்டு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே ஆத்துமேட்டில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் எலச்சிபாளையம் அருகே வையப்பமலை நேருநகர் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் திடீரென கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தன. மேலும் டிரைவர் முனிகிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் லாரியில் கொண்டு வரப்பட்டது ரேஷன் அரிசியா? என்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அரிசியை கைப்பற்றி தரக்கட்டுப்பாடு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததால் வையப்பமலை-மல்லசமுத்திரம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story