கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுக்கு இதுவரை 300 மின்கம்பங்கள் சேதம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  சூறாவளி காற்றுக்கு இதுவரை 300 மின்கம்பங்கள் சேதம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 4 May 2022 11:31 PM IST (Updated: 4 May 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுக்கு இதுவரை 300 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி உள்பட பல இடங்களில், 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பராமரிப்பிற்காக மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக அடித்த சூறாவளி காற்றினால் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் சாய்ந்து உள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின் கம்பிகளில் உள்ள இன்சுலேட்டர், வெடித்து விடுவதால் அதையும் ஆராய்ந்து மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமாகி உள்ளது. இவை அனைத்து மாற்றிமைக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story