வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 May 2022 11:31 PM IST (Updated: 4 May 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் மூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மூட்டையில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மொபட்டுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது50) என்பதும், சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story