திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 4 May 2022 11:31 PM IST (Updated: 4 May 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆலங்காயம், ஆண்டியப்பணூர், குனிச்சி, புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி, மாதனூர் ஆகிய 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளிலும் குறைந்த எடை வளர்ச்சியுடைய குழந்தைகளுக்கு என சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

கோடைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வும், சிகிச்சைகள் அளிக்கக்கூடிய இந்த சிறப்பு முகாம்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இந்த முகாம்களை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story