கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 79 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22,479 மாணவர்கள் எழுதுகின்றனர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 79 மையங்களில்  பிளஸ்-2 பொதுத்தேர்வை 22,479 மாணவர்கள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 11:32 PM IST (Updated: 4 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 79 மையங்களில் 22,479 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 79 மையங்களில் 22,479 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 192 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 158 மாணவர்களும், 11 ஆயிரத்து 321 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதுகின்றனர். 
இதற்காக மாவட்டம் முழுவதும், 79 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு 79 கண்காணிப்பாளர்களும், 1,300 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
பறக்கும் படை
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தனித்தேர்வர்களுக்காக கிருஷ்ணகிரி டி.கே. சாமி மெட்ரிக் பள்ளி, மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர் சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி என 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தேர்வு எண்களை மேஜை மீது எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Next Story