பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி பேச்சு


பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி பேச்சு
x
தினத்தந்தி 4 May 2022 11:33 PM IST (Updated: 4 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.

தர்மபுரி:
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
உயர்கல்வி வாய்ப்பு
தர்மபுரி மாவட்டம் அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு மாதிரி பள்ளியில் தங்கி படிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பு மிக்க துறைகளில் உயர் கல்வி வாய்ப்பை பெற முடியும். நீங்கள் இப்போது நன்றாக படித்தால் போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் சிறப்பாக எழுத முடியும்.
அச்சம் கூடாது
பொதுத்தேர்வு தொடர்பான அச்சம் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படக்கூடாது. நாம் படித்த பாடங்களில் இருந்து தான் வினாக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்வை எழுத வேண்டும். அதன்மூலம் சிறப்பான வெற்றியை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் மஞ்சுளா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், மாதிரிப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பிளஸ்- 2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story