கடத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


கடத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 11:33 PM IST (Updated: 4 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் மஞ்சுளா (வயது 21). இவர் வெள்ளிங்கிரி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் கடத்தூர் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மஞ்சுளாவின் தாயார் மகளை பார்க்க வந்தார். அப்போது மஞ்சுளா மின் விசிறியில் தூக்குப்போட்டு கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அரூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story