பாளையத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா


பாளையத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 4 May 2022 11:46 PM IST (Updated: 4 May 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே பாளையத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையத்தில் பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்றது. விழாவில்  சாமிக்கு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Next Story