மது விற்ற 3 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 May 2022 11:57 PM IST (Updated: 4 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தோகைமலை
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை கோட்டூர் பகுதியை சேர்ந்த தென்னரசு (வயது 23) தோகைமலை  போலீஸ் சரகத்திற்குட்பட்ட பி.உடையாப்பட்டி பகுதியிலும், கழுகூர் ஊராட்சி அ.உடையாபட்டியை சேர்ந்த தங்கவேலு மனைவி மாரியாயி (40) தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து தென்னரசு மற்றும், மாரியாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் குளித்தலை அருகே உள்ள மையிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள தனது கடையில் வைத்து மது விற்ற குளித்தலை அருகே உள்ள வடக்கு புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story