வீழிநாதசாமி கோவில் சித்திரை திருவிழா


வீழிநாதசாமி கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 5 May 2022 12:00 AM IST (Updated: 5 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குடவாசல்;
குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீழிநாதசாமி கோவில்
திருவாரூர் மாவட்டம்  குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில்  வீழிநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்   சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தேரோட்டம்
தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவில் வருகிற 9-ந் தேதி(திங்கட்கிழமை) சிறப்பு நிகழ்ச்சியான கல்யாண சுந்தரேஸ்வரர் கார்த்தியாயினி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் வருகிற 12-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 
நேற்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

Next Story