தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 12:07 AM IST (Updated: 5 May 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.

நொய்யல், 
தவுட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த கம்பத்தை பிடுங்கி காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று தண்ணீரில் விட்டனர். அதனை தொடர்ந்து மாலை மகாமாரியம்மன், பகவதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து திருவிழா நிறைவு பெற்றது. அதேபோல் திருக்காடுதுறையில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு காலை கோவில் முன் நடப்பட்டிருந்த கம்பத்தை பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story