அரியலூரில் 10,668 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்


அரியலூரில் 10,668 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 5 May 2022 12:41 AM IST (Updated: 5 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை நடக்கிறது. அரியலூரில் 10,668 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

அரியலூர், 
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.
தமிழ் பாட தேர்வு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 91 பள்ளிகளை சேர்ந்த 5,519 மாணவர்களும், 5,149 மாணவிகளும் என மொத்தம் 10,668 பேர் 59 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

Next Story