தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2022 12:41 AM IST (Updated: 5 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ.நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி. இந்திய நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்சாரம், குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஐ.டி.ஜ.நகர் பகுதி மக்கள் நேற்று என்.எல்.சி.நிர்வாகத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் தங்களுக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதியை மீண்டும் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Next Story