கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2022 12:50 AM IST (Updated: 5 May 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கில் நேற்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க போதிய அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளதா என்றும் விவசாயிகளுக்கு சரியான முறையில் உரங்கள் வழங்கப்படுகிறதா என்றும் சரிபார்த்தார். 
மேலும் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்பட்ட   பயிர் கடன் மற்றும் நகைக் கடன் போன்றவற்றை முறையாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று சாரிபார்த்தார்.

வேளாண் விரிவாக்க மையம்

இதையடுத்து அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். முன்னதாக நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் உரக்கடையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பார்வையிட்டார். 
இந்த ஆய்வின்போது கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் சரக துணை பதிவாளர் துரைசாமி, டான்பெட் மண்டல மேலாளர் சுரேஷ் குப்தா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் ராகனி, ராஜமுத்து, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், வேளாண்மை துறை இயக்குனர் ஜெயகுமார், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நடனசபாபதி, அண்ணாகிராமம் உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட  பலர் உடன் இருந்தனர்.

Next Story