கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு


கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 1:13 AM IST (Updated: 5 May 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு கன்னிச்செல்வி சென்றார்.
 அப்போது அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த மர்மநபர்கள் 2 பேர் கன்னிச்செல்வியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதைகேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்த சுற்றுசுவர் மீது ஏறி மறுபக்கம் குதித்து தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

 இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story