சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் தற்காலிக நிறுத்தங்களில் நின்று செல்ல அனுமதி


சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் தற்காலிக நிறுத்தங்களில் நின்று செல்ல அனுமதி
x
தினத்தந்தி 5 May 2022 1:26 AM IST (Updated: 5 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில்வே கோட்டத்தில் சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் தற்காலிக நிறுத்தங்களில் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரை ரெயில்வே கோட்டத்தில் சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் தற்காலிக நிறுத்தங்களில் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3 வகையாக பிரிப்பு

இந்திய ரெயில்வேயில், ரெயில் நிலையங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, புறநகர் ரெயில் நிலையங்கள், புறநகர் அல்லாத ரெயில் நிலையங்கள், பயணிகளின் கோரிக்கைக்காக தற்காலிக நிறுத்தங்களை கொண்ட ரெயில் நிலையங்கள் என உள்ளன. 
இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்கிய போது மதுரை கோட்டத்தில் தற்காலிக நிறுத்தங்கள் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள்

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நிறுத்தங்களில் சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையிலிருந்து பழனி வழியாக இயக்கப்படும் கோவை சிறப்பு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06462/06463) இரு மார்க்கங்களிலும் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இதில், மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் காலை 11 மணிக்கும், கோவையில் இருந்து வரும் ரெயில் மாலை 3.52 மணிக்கும் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். நெல்லை- செங்கோட்டை சிறப்பு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06685/06686) இரு மார்க்கங்களிலும் காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 

Next Story