சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒரு போலீஸ்காாரர் கைது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒரு போலீஸ்காாரர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 1:51 AM IST (Updated: 5 May 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்ச்சி பெற்று தலைமறைவாகி விட்ட பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்ச்சி பெற்று தலைமறைவாகி விட்ட பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பா.ஜனதா பிரமுகர் திவ்யா, காங்கிரஸ் பிரமுகர்கள் மகாந்தேஷ் பட்டீல், ருத்ரேகவுடா பட்டீல், நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத், போலீஸ்காரர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வை அரசு ரத்து செய்துள்ளது.

கலபுரகியில் உள்ள திவ்யாவுக்கு சொந்தமான பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அதுபோல் பெங்களூருவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும் முறைகேடு நடந்திருப்பது தொியவந்தது. இதுதொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீஸ்காரர் கைது

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று மேலும் ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் யஷ்வந்த் ஆகும். இவர் மிக, மிக முக்கிய நபா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் யஷ்வந்த் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது.

அவர் தேர்வு எழுதிய வினாத்தாள் உள்ளிட்டவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆய்வறிக்கையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருப்பதால் யஷ்வந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணுக்கு வவைலீச்சு

இதற்கிடையில், கலபுரகியை சேர்ந்த ரஜனா என்ற பெண், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், அதனை கண்டித்து பெங்களூருவில நடந்த போராட்டத்தில் ரஜனாவும் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக பேசி இருந்தார். அதே நேரத்தில் ரஜனா எழுதிய வினாத்தாளை ஆய்வு செய்த போது முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தார்கள். ஆனால் கடந்த 3 நாட்களாக தனது சகோதரருடன் ரஜனா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story