எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணிநேரம் வேலை நிறுத்தம்


எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணிநேரம் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 5 May 2022 1:53 AM IST (Updated: 5 May 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி.பங்கு விற்பனையை கண்டித்து, தஞ்சையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று 2 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்று நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேற்று எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்பனை தொடங்குவதை கண்டித்து, தஞ்சை கோட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 2 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி தஞ்சை எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, காப்பீடு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் சரவணபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
பாதுகாக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கை தனியாருக்கு விற்கக்கூடாது. எல்.ஐ.சி. நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் காப்பீடு கழக ஓய்வூதியர் சங்க கோட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி, கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story