கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா?
கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரி பதிலளித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரி பதிலளித்துள்ளார்.
முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு
பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வந்தாலும், வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 2022-23-ம் ஆண்டு பள்ளிகளை முன்கூட்டியே திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, வருகிற 16-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே 29-ந் தேதி தான் பள்ளிகள் தொடங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக முன்கூட்டியே வருகிற 16-ந் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரிக்கு கடிதம்
இந்த நிலையில், கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக தற்போது மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும், அதனால் பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும், விடுமுறை நாட்களை அதிகரிக்க வேண்டும், இதன் மூலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்ற முடியும் என்று கூறி முதல்-மந்திரி பசவாஜ் பொம்மைக்கு, மேல்-சபை உறுப்பினர் (எம்.எல்.சி) போஜேகவுடா கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, கர்நாடகத்தில் பள்ளிகளை திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கல்வித்துறை கமிஷனர் விசால் நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. மாநிலத்தில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகரித்தால், பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
Related Tags :
Next Story