பிளஸ்-2 மாணவி தற்கொலை


பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 2:21 AM IST (Updated: 5 May 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் பிளஸ்-2 மாணவி அதிக சத்து மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:
அம்பை பெரியகுளம் காலனி நடுத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் இசக்கியம்மாள் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த சத்து மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story