எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை, அம்பையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை கோட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் பொன்னையா முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி. முகவர் சங்க நெல்லை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச்செயலாளர்கள் பட்டன், முருகன், கோட்ட அலுவலக நிர்வாகிகள் கண்ணன், ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 16 கிளைகளில் 348 பேர் இந்த வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story