தொழிலாளியை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது


தொழிலாளியை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 2:53 AM IST (Updated: 5 May 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 61), தொழிலாளி. சம்பவத்தன்று ராஜகோபால் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்களில் வந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (21), பட்டக சாலியன்விளை சேர்ந்த செல்வமணி (21) ஆகியோர் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதனை ராஜகோபால் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார், செல்வமணி ஆகிய 2 பேரும் சேர்ந்து ராஜகோபாலை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் சிவகுமார், செல்வமணி ஆகியோரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

Next Story