20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சேலம் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நங்கவள்ளி
சேலம் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து மாறுதலாகி வந்தவர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம், பூலாம்பட்டிக்கும், மாதேசன் நங்கவள்ளிக்கும், கருப்பண்ணன் தீவட்டிப்பட்டிக்கும், அசோகன் நங்கவள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எடப்பாடி
இதேபோல், பனமரத்துப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தேவிமரியசெல்வம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏத்தாப்பூருக்கும், ஆட்டையாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், ஏற்காட்டிற்கும், அங்கு பணியாற்றிய மோகன், ஆட்டையாம்பட்டிக்கும், சங்ககிரியில் பணியாற்றிய அப்பு,
தேவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேவூரில் பணிபுரிந்த செந்தில்குமரன், மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பூலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சங்ககிரிக்கும், எடப்பாடி பிரகாஷ், பனமரத்துப்பட்டிக்கும் என மொத்தம் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story