நம்பியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பரபரப்பு; அதிகாரிகளை கண்டித்து 15 ஊராட்சி தலைவர்கள் வௌிநடப்பு
அதிகாரிகளை கண்டித்து நம்பியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 15 ஊராட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர்
அதிகாரிகளை கண்டித்து நம்பியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 15 ஊராட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி ஒன்றிய கூட்டம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. இந்தநிலையில் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) சக்திவேல் கூட்டத்தை நடத்தினார். ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
27 துறைசார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறைபாடுகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குடிநீர் குழாய்கள்
இந்தநிலையில் கெட்டிசெவியூர் ஊராட்சி தலைவர் மகுடேஸ்வரன் கூட்டத்தில் பேசும்போது, ‘தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஊராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. குடிநீர் குழாய்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 1½ ஆண்டுகளாக குடிநீர் குழாய்கள் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொலவபாளையம், கோசனம், ஆண்டிபாளையம், வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
புறக்கணிப்பு
நாங்கள் பலமுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்’ என்றார். இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் 15 ஊராட்சி தலைவர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story