சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
எரிவாயு
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.05.2022 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.1014, கோவில்பட்டியில் ரூ.1012.50, கழுகுமலையில் ரூ.1021, கயத்தாறில் ரூ.1024, எட்டயபுரத்தில் ரூ.1012.50 மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1031 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை விவரம்
மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1014 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1014 எனவும் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story